ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல 'மேட் இன் சீனா': ராகுல்

சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சமத்துவத்திற்கான சிலை சீனாவில் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் 
ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல 'மேட் இன் சீனா': ராகுல்


சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்துவரும் மத்திய அரசு, தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த சமத்துவத்திற்கான சிலை சீனாவில் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான "பஞ்சலோக' சிலையாக ரூ.1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

ராமானுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமானுஜர் இந்தப் பூமியில் 120 ஆண்டுகள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை' என வர்ணிக்கப்படும் இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5 ஆம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில், சமத்துவத்துக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ள ராமானுஜர் சிலையை இந்தியாவில் வடிக்கவில்லை என்றும், மாறாக சீனாவில் வடிக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: எதற்கெடுத்தாலும் சுயசார்பு இந்தியா என பிரசாரம் செய்யும் மத்திய அரசு, ராமானுஜர் சிலையை வடிக்கும் பணியை மட்டும் சீனாவிடம் ஒப்படைக்க அனுமதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதும் சிறு தொழில்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே மேட் இன் இந்தியா என்ற முழக்கம் சாத்தியமாகும் என்று ராகுல் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com