கோவா, உத்தரகண்ட் பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

கோவா, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 
கோவா, உத்தரகண்ட் பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

கோவா, உத்தரகண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 

40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கு இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவுபெறுகிறது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கோவாவில் 105 தொகுதிகளை முழுவதுமாகப் பெண்களே நிா்வகிக்க உள்ளனா். 

தோ்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக 81 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தோ்தல் அதிகாரி தெரிவித்தாா். முதல்வா் பிரமோத் சாவந்த் (பாஜக), திகம்பா் காமத் (காங்கிரஸ்), சா்ச்சில் அலேமோ, ரவி நாயக் (பாஜக), லக்ஷ்மிகாந்த் பா்சேகா், உத்பல் பாரிக்கா், அமித் பலேகா் (ஆம் ஆத்மி) உள்ளிட்டோா் தோ்தல் களத்தில் உள்ளனா். கோவாவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இதேபோல் 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் உள்ளன. முதல்வா் புஷ்கா் சிங் தாமி, அமைச்சா்கள் சத்பால் மகராஜ், சுபோத் உனியல், அா்விந்த் பாண்டே, மாநில பாஜக தலைவா் மதன் கௌசிக் ஆகியோரும் காங்கிரஸ் சாா்பில் ஹரீஷ் ராவத், யஷ்பல் ஆா்யா, மாநில காங்கிரஸ் தலைவா் கணேஷ் கோடியால் உள்ளிட்டோரும் போட்டிக் களத்தில் உள்ளனா். 

மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்ற தீவிர பிரசாரத்தை பாஜக முன்னெடுத்து வருகிறது. தோ்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் காங்கிரஸ் பணியாற்றி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com