உ.பி.யில் விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த வேண்டாம்: அமித் ஷா

உ.பி. தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம் என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

திபியாபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது:

"மார்ச் 18-ம் தேதி ஹோலிப் பண்டிகை. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை, 10-ம் தேதி பாஜக அரசு ஆட்சிக்கு வரும், இலவச சமையல் எரிவாயு உருளைகள் மார்ச் 18-ம் தேதி உங்கள் வீடு வந்து சேரும். விவசாயிகள் யாரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டாம்.

சமாஜவாதி அழிக்கப்பட்டு விட்டது. 300-க்கும் மேற்பட்ட இடங்களுடனான பாஜக அரசுக்கு மேற்கு உத்தரப் பிரதேசம் அடித்தளம் அமைத்துவிட்டது. மூன்றாவது கட்ட வாக்குப்பதிவில் இந்தப் பெரும்பான்மை மேலும் பெரிதாக்கப்பட வேண்டும்."

உத்தரப் பிரதேசத்தில் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com