வேளாண் ட்ரோன் திட்டம் ஒரு புதிய புரட்சியின் ஆரம்பம்: பிரதமர் மோடி நம்பிக்கை

இந்த புதிய திட்டம் விவசாயிகளை உற்சாகம் அடைய வைக்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் ட்ரோன் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி
வேளாண் ட்ரோன் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி

ட்ரோன் துறையில் இந்தியாவின் திறன் அதிகரித்துவருவது உலகுக்கு புதிய தலைமையை தரும் என பிரதமர் மோடி இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி விவசாயப் பணிகளுக்கு ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் வேளாண் ட்ரோன் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டம் விவசாயிகளை உற்சாகம் அடைய வைக்கும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மோடி, "இந்தியாவில் ட்ரோன் ஸ்டார்ட்-அப்கள் என்ற புதிய கலாசாரம் தயாராகி வருகிறது. அவர்களின் எண்ணிக்கை விரைவில் 200லிருந்து ஆயிரக்கணக்கில் உயரவுள்ளது. இது மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வழிவகுக்கும். 

ட்ரோன் துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்யும். துறையின் வளர்ச்சியை மேலும் எளிதாக்குவதற்கு பல சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை நடவடிக்கைகளை அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் பறக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத் துறை சார்ந்ததாகவே இருந்தது. 21 ஆம் நூற்றாண்டில் நவீன விவசாய வசதிகளை வழங்குவதில் இது ஒரு புதிய அத்தியாயமாகும், மேலும் இது ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக நிரூபிப்பது மட்டுமல்லாமல் எல்லையற்ற சாத்தியக்கூறுகளையும் திறக்கும்.

ட்ரோன் துறையை திறந்து விடுவது குறித்த அச்சத்தில் அரசு நேரத்தை வீணாக்கவில்லை. இந்தியாவின் இளம் திறமைகளை நம்பி புதிய மனநிலையுடன் முன்னேறியது. பட்ஜெட் மற்றும் கொள்கை நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

கிராமங்களில் நில உரிமையை பதிவு செய்தவற்கும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட 'சுவாமித்வா யோஜனா' திட்டத்திற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. விவசாய ட்ரோன் ஒரு புதிய புரட்சியின் ஆரம்பம். 

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்த முடியும். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com