உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 14 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்குச் சென்றவர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலியாகினர்.
உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 14 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண நிகழ்விற்குச் சென்றவர்கள் பயணித்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலியாகினர்.

உத்தரகண்டின் சம்பாவத் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திருமணத்திற்குச் சென்று திரும்பியவர்கள் பயணித்த பேருந்து தண்டா பகுதியில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

உடனடியாக, அப்பகுதிக்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், விபத்தால் 14 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com