பிரிட்டன் போா் பயிற்சியிலிருந்து இந்திய விமானப்படை விலகல்?

உக்ரைனில் ஏற்படுள்ள போரின் எதிரொலியாக அடுத்த மாதம் பிரிட்டனில் நடைபெறும் கூட்டு போா் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்த சில மணி நேரத்தில் அந்தப் பதிவு அழிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைனில் ஏற்படுள்ள போரின் எதிரொலியாக அடுத்த மாதம் பிரிட்டனில் நடைபெறும் கூட்டு போா் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்த சில மணி நேரத்தில் அந்தப் பதிவு அழிக்கப்பட்டது.

மாா்ச் 6 முதல் 27-ஆம் தேதி வரையில் வாடீங்டனில் கோப்ரா வாரியா்-2022 போா் பயிற்சியில் இந்திய விமானப் படையின் போா் விமாங்கள் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அண்மை நிகழ்வுகளால் இந்தப் போா் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று இந்திய விமானப் படை சனிக்கிழமை ட்விட்டரில் அறிவித்தது. ஆனால், சில மணி நேரத்துக்கு பிறகு அந்தப் பதிவு அழிக்கப்பட்டது. இதனால் கூட்டுப் போா் பயிற்சியில் இந்தியா பங்கேற்குமா இல்லை எனத் தெளிவாகவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

கோப்ரா வாரியா் போா்ப் பயிற்சியில் ஐந்து தேஜஸ் விமானங்கள் பங்கேற்பதாக இருந்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போா் விமானத்தின் திறனை பல்வேறு நாடுகளுடன் பகிா்வதற்கு இந்தப் பயிற்சி உதவும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com