அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்துடன் யானை சவாரி செய்தார்.
மூன்று நாள் பயணமாக அசாம் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று காலை காசிரங்கா தேசிய பூங்காவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தார்.
அங்கு தனது குடும்பத்துடன் யானை சவாரி செய்து அவர் மகிழ்ந்தார். குடியரசுத் தலைவரின் வருகையைக் கருத்தில் கொண்டு தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரி மற்றும் ஜீப் சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு கருதி பூங்காவில் ஒருசில பகுதிகள் மட்டும் இரண்டு நாள்கள் மூடப்படும் என காசிரங்கா தேசிய பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









