பாஜக எம்எல்ஏவை பளார் என அறைந்த விவசாயி; காரணம் என்ன? 

நிகழ்ச்சி ஒன்றில் விவசாயி ஒருவர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
பாஜக எம்எல்ஏவை பளார் என அறைந்த விவசாயி
பாஜக எம்எல்ஏவை பளார் என அறைந்த விவசாயி

உத்தரப் பிரதேசம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல், பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. பாஜகவை பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் அக்கட்சிக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. 

யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி பெரும் சவாலாக மாறியிருப்பது ஆகியவை பாஜகவுக்கு நெருக்கடி அளித்துவருகிறது. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தை வெல்வதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பது, பிரசாரங்களை மேற்கொள்வது என பாஜக நான்கு பக்கங்களும் சுழன்று வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் விவசாயி ஒருவர் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

எம்எல்ஏவை விவசாயி அறையும் விடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மேடை ஒன்றில் அமர்ந்திருக்கிறார். அப்போது மேடையில் ஏறி வந்த விவசாயி, யாரும் எதிர்பாராத வகையில் பாஜக எம்எல்ஏவை அறைந்தார்.

பின்னர், அந்த விவசாயி அங்கிருந்து அழைத்து செல்லப்படுகிறார். மூத்த பாஜக தலைவர் கல்யாண் சிங்கின் பிறந்தநாளான ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்ற விழாவின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த விடியோவில் உள்ள பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா என்றும் அவரை அடித்தாக கூறப்படும் விவசாயி பெயர் சத்ரபால் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து சமாஜ்வாடி கட்சியின் அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பாஜக எம்எல்ஏ பங்கஜ் குப்தா ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில், விவசாயி ஒருவர் எம்எல்ஏவை அறைந்துள்ளார்.

இந்த அறை எம்எல்ஏவுக்கானது அல்ல, மாறாக பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசின் மோசமான கொள்கைகள், மோசமான ஆட்சி மற்றும் எதேச்சதிகாரத்துக்கான அறை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com