

2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜன.31 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது.
2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி, ஜன.31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11 வரை முதல்கட்டமாகவும் மார்ச் 10 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 8 ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்தியரசு அறிவித்துள்ளது.
மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வருகிற பிப்.1 ஆம் தேதி கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.