புது தில்லி: நாடு முழுவதும் நவம்பர் - டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற 10,11ஆம் வகுப்பு சிபிஎஸ்இ முதல் பருவத் தேர்வு முடிவுகள் விரைவில் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டன.
ஆனால் பல்வேறு காரணங்களால் ஜனவரி 15ஆம் தேதி சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதனால், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள, தேர்வெழுதியருக்கும் மாணவ, மாணவிகள் இன்னமும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அடுத்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றோ, தேதி குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் தரப்பில் எந்த உறுதி செய்யப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை.
இதனால், வரும் வாரத்தில் எந்த நேரத்திலும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும், மாணவர்கள் அவ்வப்போது சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், cbsc.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிலாக்கர் எனப்படும் செயலி மூலமாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்.
உமங் செயலி மற்றும் குறுந்தகவல் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகள்..
- cbseresults.nic.in
- cbse.nic.in
- cbse.gov.in
மேற்கண்ட இணையதளங்களிலிருந்து முதல் பருவத்தேர்வுக்கான மதிப்பெண்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் மாவட்டத்தில் தூா்ந்து வரும் ஏரிகள்! சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்குர்!

சுதந்திர நாளில்..! முக்கியத்தும் இழக்கும் சிறந்த பணியாளா் விருது! துறைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்க எதிா்பாா்ப்பு
மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடரவேண்டும்: கமல்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



