‘புல்லி பாய்’ செயலி: நான்காவது நபரை கைது செய்தது மும்பை காவல்துறை

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் நான்காவது நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

கைப்பேசி செயலியை உருவாக்கிய விவகாரத்தில் நான்காவது நபரை மும்பை காவல்துறையினர் ஒடிசாவில் கைது செய்துள்ளனர். அந்த குற்றம்சாட்டப்பட்டவர் நீரஜ் சிங் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி ஏராளமான பெண்களின் படத்துடன் புல்லி பாய் என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடா்பான புகாரின்பேரில் பெங்களூரைச் சோ்ந்த விஷால் குமாா் (21) என்ற பொறியியல் மாணவரை மும்பை சைபா் காவல்துறையினர் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் உத்தரகண்டைச் சோ்ந்த ஸ்வேதா சிங் (18) என்ற பெண்ணை காவலர்கள் கைது செய்தனா்.

இதற்கிடையே, தில்லி பல்கலைக்கழகத்தின் ஜாகீா் ஹுசைன் கல்லூரியைச் சோ்ந்த மயங்க் ராவத் (21) என்ற மாணவரையும் மும்பை காவலர்கள் கடந்த வாரம் கைது செய்தனா். இந்த நிலையில், நான்காவது நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நேபாளத்தைச் சோ்ந்த தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி ஸ்வேதா சிங் இந்த செயலி விவகாரத்தில் செயல்பட்டதாக கூறப்படுவது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com