நேரடியாகப் பருவத்தேர்வு: தமிழக கல்லூரிகள் பிடிவாதம்

பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக கொடிபித்துள்ளன, தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகள்.
நேரடியாகப் பருவத்தேர்வு: தமிழக கல்லூரிகள் பிடிவாதம்
நேரடியாகப் பருவத்தேர்வு: தமிழக கல்லூரிகள் பிடிவாதம்


சென்னை: பல்கலைக்கழக பருவத் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக கொடிபித்துள்ளன, தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகள்.

இந்த கரோனா பேரிடர் காலம் தீவிரமடைந்து, மறுபடியும் சீரடைந்ததும், நேரடியாக கல்லூரிகளிலேயே பருவத் தேர்வுகளை நடத்த காத்திருக்கவும் தமிழக கல்லூரிகள் தயாராகவே உள்ளன.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கல்லூரிகள் முடப்பட்டு, பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், காங்கிரஸ் மாணவர் அமைப்பு - இந்திய தேசிய மாணவர் அமைப்பு உள்ளிட்டவை, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு, ஆன்லைன் மூலம் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளன. சில மாநிலங்களும், இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு, கல்வியாண்டு நீள்வதைத் தடுக்க முடிவு செய்துள்ளன.

ஆனால், தமிழகத்தில் மட்டும் கல்லூரி நிர்வாகங்கள், ஆன்லைன் தேர்வு காரணமாக கல்வியின் தரத்தில் சமரசம் செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், கரோனா பரவல் குறையத் தொடங்கியதும் நேரடியாகவே தேர்வுகளை நடத்த காத்திருக்கத் தயார் என்றும் கூறியுள்ளன.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களின் படிப்புத்திறன் குறைந்துவிட்டது. இப்போது இறுதியாண்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வெழுதிவிட்டு, வேலைக்குச் செல்லும் போது அவர்களது பணித்திறன் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார் அரசுக் கலைக் கல்லூரி தலைமை பேராசிரியர்.

நிச்சயம் ஆன்லைன் பருவத் தேர்வுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். உயர்கல்வித்துறை ஒரு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று டிஜி வைஷ்ணவ கல்லூரி தலைமை பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரிகள் எல்லாம் கரோனா மையங்களாக மாற்றப்பட்டிருந்தன. ஆனால் இந்த ஆண்டு நிலைமை அவ்வாறு இல்லை. ஜனவரி இறுதியில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கினாலும் நேரடியாகத் தேர்வுகளை நடத்தலாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே நாங்கள் அனைத்து மாணவர்களையும் நேரடியாக தேர்வு எழுதுமாறு தயாராகுங்கள் என்று வலியுறுத்தி வருகிறோம். பிப்ரவரியில் கரோனா பாதிப்பு குறையவில்லை என்றாலும் கூட மார்ச் மற்றும் ஏப்ரலில் கூட இரண்டு பருவத் தேர்வுகளையும் அடுத்தடுத்து நடத்த தயாராக உள்ளோம். ஆனால், ஆன்லைன் தேர்வு நடத்த நிச்சயமாக ஒப்புக் கொள்ள மாட்டோம் என்கிறார் குரு நானக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் எம்.ஜி. ரகுநாதன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com