அடுத்த முக்கிய விக்கெட்டும் போச்சு...பின்னடைவை சந்தித்த பாஜக?

கடந்த 2014 முதல் 2017 வரை, கோவா முதல்வராக பொறுப்பு வகித்தவர் லட்சுமிகாந்த் பர்சேகர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவா முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான லட்சுமிகாந்த் பர்சேகர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்த நிலையில், கட்சியிலிருந்து விலகிவதாக அவர் அறிவித்துள்ளார்.

64 வயதான பர்சேகர் இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "கட்சியில் தொடர விருப்பமில்லை. இன்று மாலை, அதிகாரப்பூர்வமான ராஜிநாமா செய்யவுள்ளேன். தற்போது பதவி விலக முடிவு செய்துள்ளேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்யப்படும்.

மாண்ட்ரேமில் உள்ள உண்மையான பாஜக தொண்டர்களை எம்எல்ஏ தயானந்த் சோப்தே புறக்கணித்து வருகிறார். இதன் காரணமாக அவர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது" என்றார்.

தேர்தல் அறிக்கை குழு தலைவராகவும் முக்கிய குழுவின் உறுப்பினராகவும் பர்சேகர் பதவி வகித்துவருகிறார். கடந்த 2002 முதல் 2017 வரை, மாண்ட்ரெம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக பர்சேகர் இருந்திருக்கிறார். வரும் தேர்தலில், பாஜக சார்பாக தற்போது எம்எல்ஏவாக உள்ள தயானந்த் சோப்தே, அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட பர்சேகர், பாஜகவின் தயானந்திடம் தோல்வி அடைந்தார். பின்னர், 2019ஆம் ஆண்டு, ஒன்பது முக்கிய நிர்வாகிகளுடன் காங்கிரஸிலிருந்து விலகி அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 

கோவா முதல்வராக பொறுப்பு வகித்த மனோகர் பாரிகர், மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்ட பிறகு, கடந்த 2014 முதல் 2017 வரை, கோவா முதல்வராக பொறுப்பு வகித்தவர் லட்சுமிகாந்த் பர்சேகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com