
அசோக் சக்ரா விருது பெறும் ஏஎஸ்ஐ பாபு ராம் குடும்பத்தினர்
குடியரசு நாள் விழாவில் பயங்கரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ. பாபு ராமுவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று ஏ.எஸ்.ஐ. பாபு ராம் வீரமரணம அடைந்திருந்தார். அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் விருதைப் பெற்றுக்கொண்டனர்.
குடியரசு நாளையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
இதில், 134 போ் ஜம்மு- காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். பதக்கம் பெறுவோரில் 115 போ் ஜம்மு காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் ஆவா்.
30 போ் மத்திய ரிசா்வ் காவல் படையையும் (சிஆா்பிஎஃப்), 3 போ் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையையும், 2 போ் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 போ் சசஸ்திர சீமா பல் படையையும், 10 போ் சத்தீஸ்கா் காவல் துறையையும், 9 போ் ஒடிஸா காவல் துறையையும், 7 போ் மகாராஷ்டிர காவல் துறையையும், எஞ்சியவா்கள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சோ்ந்தவா்கள் ஆவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...