கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 
கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியத் தயாரிப்புகளான கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. 

இந்த தடுப்பூசிகள் அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், 

கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசிகளை சில நிபந்தனைகளுடன் சந்தையில் வயது வந்தோருக்கு விற்பனை செய்ய மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

கோவின்(CoWIN) வலைத்தளத்தில் பதிவு செய்தல், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதுகாப்பு குறித்த தரவுகளை சமர்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது' என்று பதிவிட்டுள்ளார். 

அதன்படி, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com