'மாமா, எங்க அப்பாவுக்கு ஓட்டு போடுங்க..' அயோத்தியில் ஒலிக்கும் குரல்
'மாமா, எங்க அப்பாவுக்கு ஓட்டு போடுங்க..' அயோத்தியில் ஒலிக்கும் குரல்

'மாமா, எங்க அப்பாவுக்கு ஓட்டு போடுங்க..' அயோத்தியில் ஒலிக்கும் குரல்

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காயத்ரி பாண்டே, வாக்களிக்கக் கூட இன்னமும் தகுதிப்பெறவில்லை.


அயோத்தியா: வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் காயத்ரி பாண்டே, வாக்களிக்கக் கூட இன்னமும் தகுதிப்பெறவில்லை. ஆனால், அவர் தனது தந்தைக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரது தேர்தல் பிரசாரத்தை கிராம மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அவர்களுக்கு நல்ல வரவேற்பும் கொடுக்கிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பவன் பாண்டேவின் ஏழு வயது மகள் காயத்ரி பாண்டே. இவருக்கு இன்னும் ஓட்டுப் போடும் வயது கூட ஆகவில்லை. ஆனால், தனது தந்தையுடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தினமும் காலையில் எழுந்து, அந்த சின்னஞ்சிறு சிறுமி, தனது தந்தையுடன் புறப்பட்டுவிடுகிறார். வீடு வீடாகச் சென்று தனது தந்தை மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்துக்கு உதவி செய்கிறார். விரைவாக தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு ஆன்லைன் வகுப்புக்காக ஓடோடி வந்து விடுகிறார் காயத்ரி.

ஒவ்வொரு வீடாகச் சென்று, அங்கே நிற்பவர்களைப் பார்த்து, "மாமா, என் அப்பாவுக்கு வாக்களியுங்கள். ஆகிலேஷ் ஐயா முதல்வரானால் உங்களது அனைத்துப் பிரச்னைகளும் சரியாகிவிடும்" என்கிறார் மழலை மாறாத குரலில்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com