'புல்லி பாய்' செயலி விவகாரம்: நீரஜ் பிஷ்னோயிக்கு ஜாமின் மறுப்பு

'புல்லி பாய்' செயலி விவகாரம்: நீரஜ் பிஷ்னோயிக்கு ஜாமின் மறுப்பு

'புல்லி பாய்' செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் புஷ்னோய்க்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

'புல்லி பாய்' செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் புஷ்னோய்க்கு தில்லி உயர்நீதிமன்றம் ஜாமின் தர மறுப்பு தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டின் தீவிரத் தன்மை மற்றும் விசாரணையின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் எந்தவித சலுகையும் வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 

முஸ்லிம் பெண்களை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாகக் கூறி ஏராளமான பெண்களின் படத்துடன் புல்லி பாய் என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். 

 பெங்களூரைச் சோ்ந்த விஷால் குமாா் (21) என்ற பொறியியல் மாணவரை மும்பை சைபா் காவல் துறையினர் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின்பேரில் உத்தரகண்டைச் சோ்ந்த ஸ்வேதா சிங் (18) என்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையே, தில்லி பல்கலைக்கழகத்தின் ஜாகீா் ஹுசைன் கல்லூரியைச் சோ்ந்த மயங்க் ராவத் (21) என்ற மாணவரையும் மும்பை காவல் துறையினர் ஜனவரி 4-ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து 20-ஆம் தேதி செயலியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த நீரஜ் பிஷ்னோயையும் காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், நீரஜ் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று (ஜன.30) விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தது. 

100 பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் முஸ்லீம் பெண்களை விற்பனை செய்வதை இலக்காக வைத்து இந்த செயலி செயல்பட்டு வந்தது. வழக்கின் தீவிரத் தன்மை மற்றும் விசாரணையின் ஆரம்ப நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com