அடித்து நொறுக்கப்பட்ட தன் அலுவலகத்தைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி

அடித்து நொறுக்கப்பட்ட தன் அலுவலகத்தைப் பார்வையிட்டார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 24 ஆம் தேதி வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள்  நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பின்,  இந்திய மாணவர் சங்கத்தினரே இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.

மேலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் உரையாடினார்.

#WATCH | Kerala: Congress MP Rahul Gandhi's office in Wayanad vandalised.

Indian Youth Congress, in a tweet, alleges that "the goons held the flags of SFI" as they climbed the wall of Rahul Gandhi's Wayanad office and vandalised it. pic.twitter.com/GoCBdeHAwy

— ANI (@ANI) June 24, 2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com