நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் உதய்பூர் படுகொலை வழக்கில், தையல்காரரைக் கொன்றவர்களில் முக்கியமானவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நூபுர் சர்மாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்து வந்ததற்காக, ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்க.. அமராவதியில் மருந்தாளுநர் கொலை, உதய்பூர் போன்ற சம்பவம்: என்ஐஏ விசாரணை
தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய கட்சியின் செய்தித் தொடர்புப் பிரிவுத் தலைவர் பவன் கெரா, மிகவும் முக்கியமான இந்தத் தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
@Pawankhera in a sensational press conference shares evidence on #Udaipur Horror accused Mohammad Rafiq's connection with BJP's Gulab Chand Kataria and his participation in several party programmes. pic.twitter.com/8oa7SM0xdJ
â Maanmohan Singh Pahujaa (@msgpahujaa) July 2, 2022
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநில சிறுபான்மைப் பிரிவு மறுத்துள்ளது.
உள்ளூர் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் சிலருடன் ரியாஸ் அஹ்தரி இருக்கும் புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது என்று சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் முகமத் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
I am not surprised that you are peddling FakeNews.
â Amit Malviya (@amitmalviya) July 2, 2022
The Udaipur murderers WERNT members of the BJP. Their attempt to infiltrate was like the LTTE assassins attempt to enter the Congress to kill Rajiv Gandhi.
Congress should stop fooling around with terror and national security. https://t.co/Nn5FKzxiwS
யார் வேண்டுமானாலும் எந்தத் தலைவருடன் வேண்டுமானாலும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அதனாலேயே அவர் பாரதிய ஜனதா உறுப்பினர் ஆகிவிட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர், உள்ளூர்த் தலைவர்களுடன் அந்தப் படத்தை எடுத்திருக்கலாம் என்றும் கான் கூறினார்.
தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் இருக்கும் படங்களை முகநூல் அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான், அதுபோலவே இந்தப் படத்தையும் பதிவிட்டிருப்பார், அதனால் அவர் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர் என்பது சரியல்ல என்றும் கான் மறுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியானது உயிர் திரைப்படம்!

உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!
உதயநிதி கைது; தவெக அரசின் கோழைத்தனம்: கனிமொழி கண்டனம்

Bunch Of Idiots! கைதான பிறகு உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



