ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில்,
இந்திய-ஜப்பானிய உறவுகளை ஆழப்படுத்த முக்கிய பங்காற்றிய ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
அவர் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்: ஷிண்சோ அபே உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் பிரதமர்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் சுடப்பட்டார். இதில் அவரது மார்பில் குண்டு பாய்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.