"காளி தேவியின் ஆசீர்வாதம் இந்தியாவுக்கு எப்போதும் உண்டு": பிரதமர் மோடி

உலக நலனுக்காக இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு முன்னேறி வரும் இந்தியாவுக்கு காளி தேவியின் எல்லையற்ற ஆசீர்வாதம் எப்போதும் இந்துகொண்டே இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

புதுதில்லி: காளியின் ஆவணப்பட போஸ்டர் சர்ச்சைக்கு மத்தியில், "நமது நம்பிக்கை மற்றும் நம்பிக்கைகள் தூய்மையானதாக இருக்கும் போது, ​​சக்தியே (காளி தேவியே) உங்களுக்கு வழி காட்டுகிறது. உலக நலனுக்காக இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு முன்னேறி வரும் இந்தியாவுக்கு காளி தேவியின் எல்லையற்ற ஆசீர்வாதம் எப்போதும் இந்துகொண்டே இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் அமைப்பைச் சேர்ந்த சுவாமி ஆத்மஸ்தானந்தாவின் நூற்றாண்டு விழாவில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். 

அப்போது, சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி தேவியின் தரிசனம் பெற்றதாகவும், அவளது உணர்வால் அனைத்தும் வியாபித்திருப்பதாக நம்புவதாகவும் கூறினார்.

"சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் காளியின் தரிசனத்தைப் பெற்றவர், அவர் தன்னை முழுமையாக காளியின் காலடியில் ஒப்படைத்துக் கொண்டவர். இந்த உலகம் முழுவதும் தேவியின் அருளால் உணர்வால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார் என தெரிவித்த மோடி, இந்த உணர்வு மற்றும் நம்பிக்கை வங்காளத்தின் காளி பூஜையில் தெரியும்," என்று அவர் கூறினார்.

மேலும், ​​"தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மேற்கு வங்கத்தில் உள்ள பேலூர் மடத்திற்கும் (தக்கினேஷ்வர்) காளி கோயிலுக்கும் சென்றிருப்பதாகவும், அப்போது ஒருவிதமான தொடர்பை உணருவது இயற்கையானதாக இருக்கும் என்று கூறினார். 

மேலும், உங்கள் நம்பிக்கை மற்றும் நம்பிக்கைகள் தூய்மையாக இருக்கும்போது, சக்தியே (காளி தேவியே) தானாகவே வந்து உங்களுக்கு வழி காட்டுவாள் என்றும், காளியின் எல்லையற்ற ஆசீர்வாதம்  இந்தியாவுக்கு எப்போதும் இருக்கும். உலக நலனுக்காக இந்த ஆன்மீக ஆற்றலைக் கொண்டு நாடு முன்னேறி வருகிறது" என்று கூறினார். 

மனித குலத்திற்கான ராமகிருஷ்ண மிஷனின் சேவையைப் பாராட்டிய மோடி, அதன் புனிதர்கள் நாட்டில் தேசிய ஒற்றுமையின் தூதர்களாக அறியப்படுகிறார்கள் என்றும், அவர்கள் வெளிநாடுகளில் இந்திய கலாச்சாரத்தின் பிரதிநிதிகள் என்றும் மோடி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com