அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

10-20% வரை உயரும் மின் கட்டணம்! 

மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த மாதம் முதல் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:45 am

DIN


மும்பை: மகாராஷ்டிரம் மாநிலத்தில் இந்த மாதம் முதல் 10 முதல் 20 சதவீதம் வரை மின் கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக கூடுதல் விலைக்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. 

இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிர மாநில மின் ஒழுங்குமுறை ஆணையம்(எம்இஆர்சி) எரிபொருள் சரிசெய்தல் கட்டணங்களை (எப்ஏசி) விதிக்க மின் நிறுவனங்களுக்கு  ஜூன் 1 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. 

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் குடியிருப்பு, வணிகம், தொழில்துறை போன்ற அனைத்து மின் பயனாளர்களுக்கும் மாதாந்திர மின் கட்டணம் குறைந்தபட்சம் 10 முதல் அதிகபட்சம் 20 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. 

அதாவது, ஒரு யூனிட்டுக்கு ரூ.1 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கட்டண உயர்வு ஜூலை மாதம் முதலே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 

எரிபொருள் சரிசெய்தல் கட்டணங்களை விதிக்க மின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருந்தாலும், அது காலாண்டு அடிப்படையில் இருக்கும் என்றும், அடுத்த மூன்று மாதங்களில் ஒட்டுமொத்த தொகையை சமமாக வசூலிக்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. 

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் மின் பயன்பாடுகள் கணக்கிடப்பட்டு நவம்பர் வரையிலான ஐந்து மாதங்களில் முழு கட்டணமும் வசூலிக்கப்படும். 

மின் கட்டண உயர்வு காரணமாக மும்பை பெருநகரில் மட்டும் பத்தரை லட்சம் பெஸ்ட் நிறுவன வாடிக்கையாளர்கள், 7 லட்சத்திற்கும் அதிகமான டாடா நிறுவன வாடிக்கையாளர்கள், 29 லட்சம் அதானி நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் மகாராஷ்டிரத்தில் 2.8 கோடி எம்எஸ்இ.டி.சி.எஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். 

மகாராஷ்டிராவில் உள்ள 10.5 லட்சம் சிறந்த வாடிக்கையாளர்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான டாடா பவர் வாடிக்கையாளர்கள், 29 லட்சம் அதானி மின்சார வாடிக்கையாளர்கள் மற்றும் 2.8 கோடி எம்எஸ்இடிசிஎல் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக அமையும். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களிடம் சரிசெய்தல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.