திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி: நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு மைல்கல்!

தேசிய நெடுஞ்சாலை-48 (என்எச்-48) சூரத் காம்ரேஜ் பகுதியில் டிஜிட்டல் சுங்கச் சாவடி...

News image

டிஜிட்டல் சுங்கச் சாவடி - PTI

Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm IST

இந்தியாவின் முதல் டிஜிட்டல் சுங்கச் சாவடி பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் நில்லாமல் சாவடியைக் கடந்து செல்ல முடிகிறது.

தேசிய நெடுஞ்சாலை-48 (என்எச்-48) சூரத் காம்ரேஜ் பகுதியில் முழுக்க முழுக்க மின்னணு முறையில் இயங்கும் சுங்கச் சாவடி பயன்பாட்டுக்கு வந்தது. ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச் சாவடியில் வாகனங்கள் நிற்கமல் கடந்து செல்லலாம்.

அதி நவீன ஸ்கேனர்கள், ஏ.என்.பி. ஆர் கேமிராக்கள், லிடார், ரேடார், உயர் தொழிநுட்பக் கட்டுப்பாட்டு அறை ஆகியவையே இந்த சுங்கச்சாவடியின் பின்புலத்தில் இருப்பவையாகும். கண்காணிப்பு கேமிராக்களில் ஃபாஸ்டேக் உதவியுடன் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் வாகனங்களின் விவரங்கள் பதிவாகி அதனை ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர் பயன்பாட்டுடன் இந்தச் சுங்கச் சாவடி இயங்குகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 25,000 வாகனங்களைக் கையாளும் இந்தச் சுங்கச் சாவடியிலிருந்து ஈட்டப்படும் வருவாய் ரூ. 60 லட்சம்.

இதனால் வாகனப் போக்குவரத்துநெருக்கடி குறைவதுடன், மாசுபாடும் குறைகிறது. மேலும், எரிபொருள் சேமிப்பு வாகன ஓட்டிகளுக்கு பலனிக்கிறது. முக்கியமாக பயண நேரம் குறைகிறது. இந்திய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பில் ஒரு புதிய சகாப்தத்துக்கு டிஜிட்டல் சுங்கச்சாவடித் திட்டம் முன்னோடியாக அமைத்துள்ளது.

Summary

Surat’s Kamrej stretch on NH-48 has become home to India’s first Multi-Lane Free Flow digital toll plaza

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.