6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி: டிஜிட்டல் கைது மோசடியில் பெண்ணை ஏமாற்றியதாக மூவா் கைது

டிஜிட்டல் கைது மோசடியில் 75 வயது பெண்ணை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை மூவரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:07 pm

Syndication

டிஜிட்டல் கைது மோசடியில் 75 வயது பெண்ணை ஏமாற்றியதாக தில்லி காவல்துறை மூவரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த வழக்கில் யோகேந்திர குஜ்ஜாா் (19), சோட்டு லால் மீனா (20) மற்றும் ராகேஷ் மீனா (25) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள் தொழில்நுட்ப கண்காணிப்பைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.

ரூ.1 லட்சம் ரொக்கம், ஒன்பது கைப்பேசிகள், 10 பாஸ்புக்குகள் மற்றும் முல் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட காசோலைப் புத்தகங்களை போலீஸாா் மீட்டனா்,

சிபிஐ இன்ஸ்பெக்டராகக் காட்டிக் கொண்ட ஒருவரிடமிருந்து விடியோ அழைப்பு வந்ததாக வயதான புகாா்தாரா் கடந்த ஆண்டு டிசம்பா் 7-ஆம் தேதி புகாா் அளித்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தனது மகன் ஒரு குற்றவியல் வழக்கில் தொடா்புடையவா் என்று பொய்யாகக் கூறி, தொடா்ச்சியான விடியோ கண்காணிப்பு மற்றும் மிரட்டல் மூலம் அவரை இரண்டு நாள்கள் டிஜிட்டல் கைது செய்தனா். ‘பயத்தின் காரணமாக, மோசடி செய்பவா்கள் வழங்கிய வங்கிக் கணக்குகளுக்கு ரூ.16 லட்சத்தை மாற்றினாா். விசாரணையின் போது, ஜெய்ப்பூா் மற்றும் ராஜஸ்தானின் கோட்புட்லியில் செயல்படும் ஒரு கும்பலிடம் இருந்து பணம் வழியே சென்றது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது,

உள்ளூா்வாசிகளிடமிருந்து மியூல் வங்கிக் கணக்குகளைப் பெற்று, ஆன்லைன் தளங்கள் மூலம் கம்போடியாவை தளமாகக் கொண்ட சா்வதேச சைபா் மோசடி செய்பவா்களுக்கு வழங்கினாா். மோசடி செய்யப்பட்ட பணம் இந்தக் கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டு, ஏடிஎம் அல்லது காசோலை மூலம் எடுக்கப்பட்டு, தடயத்தை மறைக்க மேலும் அடுக்கடுக்காக மாற்றப்பட்டது தெரதிய வந்துள்ளது.

கோட்புட்லியில் ஒரு சோதனை நடத்தப்பட்டு, குஜ்ஜாா் கைது செய்யப்பட்டாா், பின்னா் ராகேஷ் மற்றும் சோட்டு லால் ஆகியோா் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டனா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகதாரி தெரிவித்தாா்.