பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சரணடையுங்கள் அல்லது செத்து மடியுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து...

US President Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்த டிரம்ப், தனது சமூக ஊடகத்தில் "ஆயுதங்களை கீழே போட்டு விடுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள். ஈரானின் அச்சுறுத்தலை முற்றிலும் ஒழிப்போம். அவர்களின் ஏவுகணைகளைத் தரைமட்டமாக்குவோம்.

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் சேர்ந்து ஈரான் மீது முக்கியமான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். அவர்களின் மோசமான செயல்பாடுகள், அமெரிக்கா மற்றும் அயல்நாடுகளில் உள்ள நமது ராணுவ தளங்களுக்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தானது.

ஈரானின் பயங்கரவாதத்தை இனி பொறுத்துக்கொள்ளப் போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும்நிலையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல், ஈரான் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியை குறிவைத்து நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கமேனியை பாதுகாப்பான இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலை ஈரான் தொடர்ந்து தடுத்து வருகிறது.

Summary

Stand down or face death, US President Donald Trump warns Iran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.