அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் போரில் தலையிடாமல் இருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று டிரம்ப் பேச்சு

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:27 am IST

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தாமலிருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பேசுகையில், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை நாங்கள் பெருமையுடன் மீட்டெடுத்து வருகிறோம். எனது முதல் 10 மாத பதவிக்காலத்தில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரை நடத்தியிருக்கும். இந்தியா - பாகிஸ்தான் போரில் என்னுடைய தலையீடு இல்லாமலிருந்திருந்தால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பர் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார்.

ஒன்பதாவது போரை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் மிகவும் கடினமாக உழைத்து வருகிறது.

ரஷியா - உக்ரைன் இடையிலான படுகொலை, நான் அதிபராக இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காது" என்று தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் சுமார் 80-க்கும் அதிகமான முறை கூறிவிட்டார். இருப்பினும், டிரம்ப்பின் பேச்சை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இருநாடுகளிடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.

இருப்பினும், இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

Summary

Pakistan PM Shehbaz Sharif Said 35 Million Would Have Died If It Weren't For Me: US President Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.