பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!

பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
Updated on
1 min read

காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள், போரில் ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாக ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து வருகிறார்.

உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே முதன்மையான காரணம் என பிரதமர் மோடியைக் கடிந்து கொண்ட அவர் இந்தியாவுக்கும் 50 சதவிகித வரியை விதித்துள்ளார்.

மேலும், கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில், ஈரானில் உள்ள ஆட்சியை அகற்றிவிட்டு புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக அங்கு போராடும் மக்களும் அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகத் தீவிரமாக ஆதரவளித்து வருகிறார்.

அதே நேரத்தில், காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பின்னரும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், போருக்குப்பின் காஸாவை நிர்வகிக்க ‘காஸா அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த வாரியத்தில் இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் அனைவரும் இணைய வேண்டும் என்றும் டிரம்ப் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையைப் பொருட்டாக மதிக்காத பிரான்ஸுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக 200 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

டென்மார்க்கின் ஒரு பகுதியான ஆர்க்டிக் பிரதேசத்தில் டிரம்ப் ஏன் உறுதியாக இருக்கிறார் என்பதற்கான அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறிய கருத்துக்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கேலி செய்ததைத் தொடர்ந்து இந்த கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “பிரான்ஸின் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப் போகிறேன். அப்போது அவர் காஸா அமைதி வாரியத்தில் இணைவார். ஆனால், அவர் சேரவேண்டியது இல்லை” என மேக்ரானை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் டாவோஸில் நடைபெறும் ஜி7 தலைவர்கள் மாநாட்டில் உக்ரைன், டேன்ஸ், சிரியா, ரஷியா தலைவர்களையும் அழைத்துப் பேச முடியும் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஐக்கிய அரபு அமீரக அதிபரின் 2 மணி நேர இந்தியப் பயணம்! விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!
Summary

Trump says that if Macron is 'hostile' to Board of Peace invitation, he will impose 200% tariff on French wines and champagnes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com