விவாகரத்து வழக்கு முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா மனு நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு அளித்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அப்போது விஜய் - சங்கீதா இருவரும் விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவாகரத்து மனுவில், விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு வைத்துள்ளதாகவும் இதனால் தனக்கும் குழந்தைகளுக்கும் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் அழுத்தம் கொடுத்தால் விஜய்யுடன் தொடர்பில் இருக்கும் நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் எச்சரித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக தவெக தொண்டர்கள், சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுகுறித்து விஜய் இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபத்தில் சென்னையில் திருமண விழா ஒன்றில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா ஒன்றாக பங்கேற்றது வைரலானது. இதற்கும் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா இன்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
விஜய்யுடன் விவாகரத்து கோரியுள்ளதால் விஜய் வீட்டில் தங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ள சங்கீதா, இந்த வழக்கில் விவாகரத்து பெறும் வரை விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தான் லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் விஜய் வீட்டில் தங்குவதற்கு தனக்கு உரிமை உள்ளது, அதனால் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும் விஜய் பிரிந்து செல்ல மறுப்பதாகவும் விவாகரத்து மனு தாக்கல் செய்தால் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் என விஜய் கூறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார் சங்கீதா.
இந்த மனு பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சங்கீதாவின் இந்த புதிய மனு விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
TVK Leader Vijay wife Sangeeta files petition in court, seeks permission to stay at vijay home
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!

திமுக வேட்பாளா் வீட்டில் 122 பவுன் திருடியவா் நீதிமன்றத்தில் சரண்
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

மீடியாவை சந்திக்கும் சங்கீதா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


