சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 7) சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சால்வை அணிவித்து திருவள்ளுவர் சிலையை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்துப்போரும் இருந்து வந்தது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநா் பொறுப்பை கேரள மாநில ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியுடன் முதல்வர் ஸ்டாலின்.
Summary
TN CM MK stalin meets governor RN Ravi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

தொகுதி மறுசீரமைப்பை அவசரமாகக் கொண்டு வருவது ஏன்? முதல்வர் மு.க. ஸ்டாலின்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


