தஞ்சாவூரில் மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பங்கேற்கும் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிா்வாகிகள் காவல் துறையினரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் இரா. ராஜாராமிடம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆா். விஜய் சரவணன் உள்ளிட்டோா் மனு அளித்தனா்.
பின்னா் விஜய் சரவணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகளைத் தவெக தலைவா் விஜய் சந்தித்து பேசவுள்ளாா். இதற்காக தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மாா்ச் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிா்வாகிகள் மட்டும் பங்கேற்பா். இவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, க்யூஆா் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவா். காவல் துறையினா் உரிய அனுமதியை வழங்குவா் என நம்பியுள்ளோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூா் அருகே நாளை தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்?

தஞ்சாவூரில் மார்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் தவெக கூட்டம்: காவல் துறை அனுமதி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


