பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதா

நடிகையுடன் விஜய் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக சங்கீதா கூறியது பற்றி...

News image

விஜய் - சங்கீதா - கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 6:20 pm IST

நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, "நடிகையுடனான விஜய்யின் திருமணம் மீறிய உறவை கண்டுபிடித்த பிறகு, அதனை முறித்துக் கொள்வதாக உறுதியளித்தார். இருப்பினும், திருமணம் மீறிய உறவை விஜய் தொடர்ந்து வந்தார்.

நடிகையுடன் தொடர்ந்து வெளிநாடுகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிடுவது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கும் எனது குழந்தைகளுக்கும் மன உளைச்சலைத் தருகிறது.

நடிகையுடனான திருமணம் மீறிய உறவை அறிந்தபிறகு, வீட்டில் எனக்கான உரிமைகளை நிறுத்தியதுடன், கட்டுப்பாடுகளையும் விதித்தார். பொருளாதார ரீதியில் கட்டுப்பாடுகள் விதித்தார்.

திருமண, சமூக, தொழில் வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக என்னை விலக்கி வைத்துவிட்டார். 2021 முதல் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், மனதளவிலும் உணர்வுப்பூர்வமாகவும் இருவரும் பிரிந்தே வாழ்கிறோம்.

அனைத்துத் தரப்பினரின் மதிப்பைக் காக்கும்வகையில், நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். தேவைப்படுமாயின், விஜய்யுடன் திருமணம் மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-ஆவது எதிர் மனுதாரராகவும் சேர்ப்பேன்.

நெருக்கடி ஏற்படுமாயின், விஜய்க்கும் நடிகைக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வெளியிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து மனு அளித்துள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதியில் விஜய் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Summary

Vijay's wife Sangeeta reportedly seeking divorce after 25 years of marriage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.