

புது தில்லி : இந்தியாவுக்கு திங்கள்கிழமை(ஜன. 19) வருகை தந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயனை பிரதமர் நரேந்திர மோடி தில்லி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார்.
இது குறித்து தமது சமூக ஊடகத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், ‘எமது சகோதரர், மதிப்புக்குரிய ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயனை விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றதில் மகிழ்ச்சி. அன்னாரது வருகை இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நட்புக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை விளக்குவதக அமைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அரபு அமீரக அதிபர் இங்கு வெறும் 2 மணி நேரம் மட்டுமே இருப்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் பாலம் விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவர்த்தையில் ஈடுபட உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.