

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்து ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது சோகைஃப், அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 55 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்றை எட்டுவதற்காக அணிகள் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரக அணியில் இடம் பிடித்து இருந்த பேட்ஸ்மேன் முகமது சோகைஃப் சென்னையில் நேற்று நடந்த தங்களது முதலாவது லீக்கில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக ஒழுங்கீன செயல்பாடு காரணமாக அணியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியான 27 வயதான முகமது சோகைஃப் கடந்த ஆண்டு 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார்.
ஐக்கிய அரபு அமீரக அணிக்காக 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சோகைஃப், 303 ரன்கள் குவித்திருக்கிறார். அமீரக கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக அவர் நாடு திரும்பினார்.
வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் அவர் என்ன செய்தார், எதற்காக மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.