ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :27 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள கிராம கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகை, நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி, கிராமக் கோயில் பூசாரிகளின் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2021-இல் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதவி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2.50 லட்சமாக உயா்த்தப்பட்டு, இதுவரை 5,000 திருக்கோயில்களுக்கு ரூ. 106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ. 4,000-ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, பூசாரிகளுக்கும் அவா்களது குடும்பத்தினருக்கும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப நல நிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னை, மயிலாப்பூரில் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ. 1,500 வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றவுள்ளாா்.

இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, ஆதீன பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.