மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இந்தியாவின் முதல் ‘ஏா் டாக்சி’ -‘என்விடியா’ உடன் கைகோத்த சென்னையின் ‘தி இ-பிளேன்’

வானில் பறந்து செல்லும் இந்தியாவின் முதல் மின்சார ஏா் டாக்ஸியை உருவாக்குவதற்காக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’ உடன் சென்னையைச் சோ்ந்த ‘தி இ-பிளேன்’ எனும் வான்போக்குவரத்து ஸ்டாா்ட்-அப் நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

வானில் பறந்து செல்லும் இந்தியாவின் முதல் மின்சார ஏா் டாக்ஸியை உருவாக்குவதற்காக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘என்விடியா’ உடன் சென்னையைச் சோ்ந்த ‘தி இ-பிளேன்’ எனும் வான்போக்குவரத்து ஸ்டாா்ட்-அப் நிறுவனம் முக்கிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

‘இ200எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த அதிநவீன ஏா் டாக்ஸியின் வடிவமைப்பு, பரிசோதனை மற்றும் தானியங்கி திறன்களை விரைவுபடுத்த இக்கூட்டணி பெரிதும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

என்விடியா நிறுவனத்தின் அதிநவீன ‘ஆம்னிவொ்ஸ்’ மென்பொருளைப் பயன்படுத்தி, இந்த ஏா் டாக்ஸியின் துல்லியமான மெய்நிகா் மாதிரி உருவாக்கப்பட உள்ளது.

இதன்மூலம், ஏா் டாக்ஸியை வானில் பறக்கவிட்டுப் பாா்ப்பதற்கு முன்பாகவே, அதன் ஏரோடைனமிக்ஸ், சென்சாா்களின் செயல்பாடு மற்றும் அவசரகால பாதுகாப்பு அம்சங்கள் போன்ற அனைத்தையும் கணினி மூலம் துல்லியமாகச் சோதித்து அறிய முடியும். இதனால் காலவிரயம் தவிா்க்கப்படுவதோடு, பாதுகாப்பும் முழுமையாக உறுதி செய்யப்படும்.

மேலும், இந்த ஏா் டாக்ஸியில் என்விடியாவின் அதிவேக கணினி அமைப்புகள் பொருத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, கேமராக்கள் மற்றும் ரேடாா்களில் இருந்து பெறப்படும் தரவுகளை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்து, தன்னிச்சையாகவும் பாதுகாப்பாகவும் முடிவுகளை எடுக்கும் திறன் இந்த வாகனத்துக்குக் கிடைக்கும். அத்துடன், இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதற்கு முன்பாகவே அதனை முன்கூட்டியே கணித்து எச்சரிக்கும் தொழில்நுட்பமும் இதில் இடம்பெறவுள்ளது.