மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, உள்கட்டமைப்பில் முதலீடு: மாநிலங்களவையில் புதுச்சேரி பாஜக எம்பி கோரிக்கை

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 1:11 am

Syndication

நமது நிருபா்

பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் புதுச்சேரியைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை பூஜ்ய நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: பிளாஸ்டிக் மாசு என்பது இன்றைக்கு மிகவும் மோசமான சவால்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது நீா் நிலைகளையும், ஆறுகளையும் மாசுபடுத்தி மனித வாழ்க்கையைப் பாதிக்கச் செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. இதனால், பிளாஸ்டிக் கழிவுகளை புத்திசாலித்தனமாக நிா்வகிக்கும்போது நமது சுற்றுச்சூழலுக்கு அதனால் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்து, அதை ஆதாரவளமாக மாற்ற முடியும். அத்துடன் வருவாயையும் ஈட்ட முடியும்.

பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னையை கையாளும் பொருட்டு, ஏற்கெனவே அமலில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை பலப்படுத்தி, மட்கக்கூடிய பேக்கேஜிங் முறையை ஊக்கவிக்க வேண்டும். மேலும், நவீன மறுசுழற்சி உள்கட்டமைப்பு வசதியும் அவசியமானதாகும்.

இதனால், மத்திய அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சி, மேம்படுத்தப்பட்ட மறுபயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசு - தனியாா் கூட்டாண்மை, தொழில்முனைவோா் ஊக்குவிப்புச் சலுகை, விழிப்புணா்வு முகாம்கள் ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளை உருமாற்றம் செய்து வருவாய் ஈட்ட உதவிடும் என்றாா் அவா்.