ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறும் திடலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எஸ்பி வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, பிரதமர் மோடி நாளை மதுரை வருகிறார், மதுரையில் நடைபெறும் விழாவில் வந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். திமுக அரசு தமிழக மக்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையும் கெடுத்துவிட்டது. ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வரும். எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தில் தேஜ கூட்டணியை தலைமை தாங்குகிறார்.
தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த பின்பு கண்டிப்பாக சொல்வோம் என்றார். ஈரான் போர் குறித்த கேள்விக்கு, இதுபற்றி வெளியுறவு துறை அமைச்சர் தான் பதில் சொல்ல முடியும், என்னால் கூற முடியாது எனத் தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.
Summary
Union Minister Piyush Goyal has said that Jayalalithaa and MGR rule will return to Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூலை 15-க்குள் மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

தவெக ஆட்சி 50 ஆண்டுகள் தொடரும்: அமைச்சா் ராஜ்மோகன்
பிரதமரின் அரசுமுறைப் பயணங்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




