நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏழைகளின் எட்டாக்கனியாகும் தங்கம்... ஒரே நாளில் ரூ. 5,200 உயர்வு!

தங்கம் விலை நிலவரம் பற்றி..

News image

தங்கம் விலை உயர்வு

Updated On :28 பிப்ரவரி 2026, 9:52 am

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கம் - வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றது. அதன்படி, இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது தங்கம் - வெள்ளி இரண்டுமே விலையுயர்ந்த நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ரூ. 15,200-க்கும், ஒரு சவரன் ரூ. 2,400 உயர்ந்து ரூ. 1,21,600-க்கு விற்பனையானது.

மாலை நிலவரப்படி, கிராமுக்கு மேலும் ரூ. 350 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ. 15,550-க்கும், சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ரூ. 1,24,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 650-ம் சவரனுக்கு ரூ. 5,200-ம் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 23ஆம் தேதி ரூ.180 உயர்ந்து ரூ.14,860 ஆக இருந்தது. அது முதலே விலை உயர்வானது 100 ரூபாய்க்குள் நாள்தோறும் ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்த நிலையில், வாரத்தின் இறுதியில் ரூ.300 உயர்ந்து கிராமுக்கு ரூ.15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை காலை நிலரப்படி ரூ. 5 உயர்ந்து ரூ. 300-க்கும், கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ரூ, 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாலை நிலவரப்படி மேலும் ரூ. 20 உயர்ந்து கிராமுக்கு ரூ. 320 ஆகவும் கிலோவுக்கு ரூ. 2 ஆயிரம் உயர்ந்து ரூ. 3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் வெள்ளி விலை சிரியதளவில் ஏற்ற - இறக்கங்களை கண்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 25 உயர்ந்துள்ளது.

ஏழைகளின் எட்டாக்கனியாக தங்கம் - வெள்ளி விலை மாறி வருவது மக்கள் மத்தியில் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

Summary

The price of gold jewelry is being sold at a rate that doubles in a single day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.