

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
அந்த வகையில், திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.13,610 - க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1 லட்சத்து 8,880-க்கும் விற்பனையானது.
தொடர்ந்து, மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.13,900-க்கும், சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ரூ.1 லட்சத்து 11,200-க்கும் விற்பனையானது. இதன் மூலம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 450, சவரனுக்கு ரூ. 3,600 உயர்ந்தது.
இதனிடையே, இன்று(ஜன. 21) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14,000 - க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,415-க்கும் சவரனுக்கு ரூ. 1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15,320 - க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ.345-க்கும், கிலோ கட்டி வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து ரூ. 3.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.