

வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு இறுதிகட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரையிலான வழித்தடம் 26 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ளது.
ஏற்கெனவே முதல்கட்ட மெட்ரோ திட்டத்தில் வடபழனி இணைக்கப்பட்ட நிலையில், 2-ஆம் கட்டத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 3-ஆவது வழித்தடமானது வடபழனி மெட்ரோவைக் கடந்து பூந்தமல்லி செல்லும் வகையில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதில், வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 16 கி.மீ. தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. ரயில் என்ஜின் சோதனையும் நடத்தப்பட்டு ரயில் பாதை வடிவமைப்புக்கான உறுதிச் சான்றும் பெறப்பட்டது.
அண்மையில், வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பு உறுதித்தன்மை சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வடபழனி-பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கு இறுதிகட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரிக்குள் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.