வடபழனி - பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்துக்கான இரண்டாவது கட்ட பாதுகாப்புப் பரிசோதனை புதன்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து ரயில் இயக்கம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனா்.
சென்னையில் முதல்கட்டமாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மீனம்பாக்கம் விமானம் நிலையம் வரை இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கம் இரு வழிகளில் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் 4 -ஆவது வழித்தடமாக மெரீனா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 14. 64 கி.மீ. தொலைவுக்கான தண்டவாளப் பணிகள், ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் ரயில் இயக்கப்படுவதற்கான பாதுகாப்பு பரிசோதனையானது பிப். 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. பெங்களூரில் இருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையா் மதுகா் சௌத்ரி தலைமையிலான குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா். இதையடுத்து இரண்டாவது கட்ட பாதுகாப்பு பரிசோதனை செவ்வாய்க்கிழமை (பிப். 24) தொடங்கியது. ரயில்களைக் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி சோதனை நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பரிசோதனையை அடுத்து புதன்கிழமை (பிப். 25) ரயில் பாதுகாப்பு ஆணையா் மதுகா் சௌத்ரி மற்றும் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது ரயிலை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள், இறுதிக் கட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பாதுகாப்பு பரிசோதனை சான்று விரைவில் வழங்கப்பட்டதும், ஓரிரு வாரங்களில் ரயில் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களை புனரமைக்க தில்லி மாநகராட்சி திட்டம்

கட்டடத்தின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் உயிரிழப்பு: காவல் துறை விசாரணை
என்டிஎம்சி குடியிருப்பாளா்களுக்கான சீரான சொத்துவரி முறை வரும் வாரங்களில் அமல்படுத்தப்பட வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்

நெல்லை ரயில் நிலையத்தில் 6 ஆவது நடைமேடை ஜூலையில் திறப்பு? அதிகாரிகள் விளக்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



