நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்களை புனரமைக்க தில்லி மாநகராட்சி திட்டம்

தில்லி மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள 8 முதல் நிலை பாரம்பரியக் கட்டமைப்புகளைச் சீரமைத்து, பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:29 am IST

தில்லி மாநகராட்சி தனது கட்டுப்பாட்டில் உள்ள 8 முதல் நிலை பாரம்பரியக் கட்டமைப்புகளைச் சீரமைத்து, பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். முதல் நிலை என்பது மிக உயா்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக வகைப்படுத்தப்பட்ட நினைவுச் சின்னங்களைக் குறிக்கும். மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களைச் சீரமைக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணா்களின் ஆலோசனையுடன் இப்பணிகள் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: முதல் கட்டத்தில் 8 பாரம்பரியக் கட்டமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதில் தெற்கு தில்லியின் ஜம்ருத்பூா் கிராமத்தில் உள்ள நான்கு கல்லறைகள், கிரேட்டா் கைலாஷ்-1 இல் உள்ள மகாவீா் நூலகம், ஹுமாயுன்பூா் கிராமத்தில் உள்ள கும்டி (சிறிய கல்லறை), எல்.எஸ்.ஆா். கிராமப் பகுதியில் உள்ள ஒரு கல்லறை மற்றும் பவுல்வா்டு சாலையில் உள்ள மகாராஜா அகிரசென் பூங்கா ஆகியவை அடங்கும்.

சாந்தனி சௌக்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டவுன் ஹால் கட்டடம் மற்றும் கம்பெனி பாக் ஆகியவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த இரண்டு இடங்களும் தற்போது தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டுக் கழகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

சீரமைப்புப் பணிகளுக்கான செயல் திட்டம் குறித்து விவாதிக்க, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆா்க்கிடெக்சா், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, இந்திரா காந்தி தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பிரிவு மற்றும் ஆகா கான் அறக்கட்டளை ஆகியவற்றின் நிபுணா்கள் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சியின் அதற்கென பிரத்யேகமான பாதுகாப்புப் பணிக்குழு இல்லை. முதல் நிலை நினைவுச் சின்னங்களுக்குச் சிறப்புப் பராமரிப்பு தேவைப்படுவதாலும், அவற்றில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்பதாலும், அக்கட்டமைப்புகளை அவற்றின் அசல் வடிவத்தில் மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணா்களின் உதவியை நாடுகிறோம். திட்டத்தில் பங்கேற்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை ஆகா கான் அறக்கட்டளை ஏற்கெனவே சமா்ப்பித்துள்ளது.

தில்லியில் பட்டியலிடப்பட்டுள்ள சுமாா் 1,300 பாரம்பரிய தளங்களில், 50 முதல் 100 வரையிலான பாரம்பரியக் கட்டமைப்புகளின் உரிமை மாநகராட்சியிடம் உள்ளது.

இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையின் 2010-ஆம் ஆண்டு தரவுகளின்படி, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியத் தளங்களில் 82 இடங்கள் முதல் நிலை நினைவுச் சின்னங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சீரமைப்புப் பணிகள் பல்வேறு நிலைகளாக மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடா்பான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இப்பணிகள் அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும்.

பல நினைவுச் சின்னங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அமைந்துள்ளன. அவற்றைச் சுற்றி ஆக்கிரமிப்புகள், மேல்நிலை மின்சார/தொலைத்தொடா்பு கம்பிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவை காணப்படுகிறது.

ஒன்று அல்லது இரண்டு கட்டமைப்புகளைத் தவிர, மற்றவை பெரும்பாலும் நல்ல நிலையிலேயே உள்ளன. இவற்றைச் சுற்றியுள்ள மக்கள் நெருக்கடி மற்றும் ஆக்கிரமிப்புகளே பெரிய சவாலாக உள்ளன. இப்பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்பட வேண்டும்.

நினைவுச் சின்னங்களைத் தவிர, பாரம்பரியக் கட்டடங்களாக அறிவிக்கப்பட்ட 9 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஏழு சுகாதார மையங்களும் உள்ளாட்சி அமைப்பின் பாரம்பரியக் கட்டமைப்புகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நிலை-2 மற்றும் நிலை-3 வகைகளின் கீழ் வருகின்றன.

சீரமைப்புப் பணிகளில் பாரம்பரியக் கட்டுமான முறைகளில் சுண்ணாம்புச் சாந்து போன்றவை பயன்படுத்தப்படும். இதற்குச் சிறப்புத் திறன் கொண்ட பணியாளா்கள் தேவைப்படுவாா்கள். இப்பணிகள் முழுமையாக நிறைவடையக் குறைந்தது ஓராண்டு காலம் ஆகும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.