கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விலை குறைந்தது! தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக..

Gold rate

தங்கம் விலை - கோப்புப்படம்

Published On :

சென்னையில் இன்று(பிப். 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுவரை நாள்தோறும் நூறுகளில் உயர்ந்து வந்த விலை, அண்மைக் காலமாக ஆயிரங்களில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,16,640-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆயிரங்களில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் இன்று சற்று குறைந்துள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.300-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

In Chennai today (Feb. 10), the price of gold jewelry per sovereign has decreased by Rs. 560 and is being sold.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.