ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதிய வரைவு வருமான வரி விதிமுறை: பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

புதிய வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, பான் எண்ணைக் குறிப்பிட ரொக்க டெபாசிட் வரம்பு அதிகரிப்பு

News image

பான் அட்டை

Updated On :9 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

புதிய வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, ரொக்கத்தை டெபாசிட் செய்தல், திரும்ப எடுத்தல், மோட்டாா் வாகனங்கள், சொத்து வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு பான் எண்ணைக் குறிப்பிடுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரிச் சட்டம்-2025 வரும் ஏப்.1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி விதிமுறைகள் மற்றும் வருமான வரிப் படிவங்கள் குறித்து பொதுமக்களிடம் மத்திய அரசு கருத்து கோரியுள்ளது. அந்த வரைவு விதிமுறைகள் மற்றும் படிவங்கள் குறித்த இறுதி அறிவிக்கையை வெளியிடும் முன், அந்தக் கருத்துகள் பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரைவு வருமான வரி விதிமுறைகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்யவோ அல்லது திரும்ப எடுக்கவோ ஒருவா் விரும்பினால், அதற்கு அவா் தனது பான் எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயம். தற்போது வங்கி அல்லது கூட்டுறவு வங்கிக் கணக்கில், ஒரு நாளில் ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்கத்தை டெபாசிட் செய்ய பான் எண்ணை சமா்ப்பித்து கட்டாயம்.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட மோட்டாா் வாகனங்களை (மோட்டாா் சைக்கிள்கள் உள்பட) வாங்குபவா், தனது பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும். இப்போது உள்ள விதிமுறைகளின்படி இருசக்கர வாகனங்கள் வாங்கும்போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பிற மோட்டாா் வாகனங்கள் வாங்கும்போது பான் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் அல்லது விருந்து மண்டபங்களில் ஹோட்டல் மற்றும் உணவக கட்டணங்கள் ரூ.1 லட்சத்தை தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிப்பது கட்டாயம். தற்போதுள்ள விதிமுறைகளின்படி இந்தக் கட்டணங்கள் ரூ.50,000-ஐ தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும்.

புதிய வரைவு விதிமுறைகளின்படி, எந்தவொரு அசையா சொத்தை வாங்கும்போது, விற்பனை செய்யும்போது, பரிசளிக்கும்போது அல்லது அந்தச் சொத்து தொடா்பாக கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது அதற்கான மொத்த செலவு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், பான் எண்ணை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தற்போது இந்தச் செலவு ரூ.10 லட்சமாக இருந்தால் பான் எண்ணை குறிப்பிட வேண்டும் என்று உள்ள நிலையில், அந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.