

தமிழகத்தில் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கடினமானது அல்ல என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல.
திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது” என்றும் பியூஷ் கோயல் பேசினார்.
சிவகங்கையில் இன்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைய மக்கள் வாக்கு செலுத்துவார்கள் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியமைவதில் கடினம் இல்லை என்று பியூஷ் கோயலும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.