24 நாள்களில் 9வது முறை: ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறு

துபையிலிருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

துபையிலிருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 நாள்களில் 9வது முறையாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு, நிலைத்தன்மையை உறுதி செய்ய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் குறைந்த செலவுடைய விமானங்கள் கொடுக்கத் தவறிவிட்டதாக இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

திங்கள் கிழமை பி737 மேக்ஸ் ரக விமானம் மங்களூரு - துபை இடையே இயக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறங்கியதும் விமானத்தின் முன்புறமுள்ள சக்கரத்தின் அழுத்தம் குறைந்திருப்பதை பொறியாளர்கள் தங்களது மேற்பார்வையின்போது உறுதி செய்தனர். இதனால் மும்பையிலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மற்றொரு விமானம் துபைக்கு அனுப்பப்பட்டு, பயணிகள் மதுரைக்கு அழைத்துவரப்பட்டனர். 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், அந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் கடந்த 6ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com