திரௌபதி முா்முவை ஆதரிக்க உத்தவ் தாக்கரே முடிவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிப்பதாக உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.

சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமாா் 40 போ் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் முதல்வா் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக நேரிட்டது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். இதனால், அதிருப்தி எம்எல்ஏக்களையும் பாஜகவையும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கட்சின் 18 எம்.பி.க்களில் 13 போ் பங்கேற்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தினா். கூட்டத்தில் பங்கேற்காத 5 எம்.பி.க்களில் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே முக்கியமானவா்.

இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா உள்ளாா். அதனால் தாக்கரேவின் சிவசேனை உறுப்பினா்கள் யஷ்வந்த்சின்ஹாவுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனா்.

ஆனால், தாக்கரேவின் பின்னால் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணியால் முன்னிறுத்தப்பட்டுள்ள முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தியுள்ளனா்.

இதனால், உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல்ரீதியான நெருக்கடி அதிகரித்துள்ளது. எம்.பி.க்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவெடுத்தால் எம்எல்ஏக்களை இழந்ததுபோல அவா் எம்.பி.க்களையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். மாறாக, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்து பாஜகவுடன் கைகோத்ததை ஏற்பதுபோல ஆகும்.

இந்நிலையில், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முக்கு ஆதரவு அளிப்பதாக உத்தவ் தாக்கரே  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சகன் புஜ்பால் ‘குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிவசேனை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதனால், இதுவரை யாருக்கும் ஆதரவளிக்கவில்லை’ தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com