குஜராத் கனமழைக்கு 14 பேர் பலி, 31,000 பேர் வெளியேற்றம்

குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். 31,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
குஜராத் கனமழைக்கு 14 பேர் பலி, 31,000 பேர் வெளியேற்றம்

குஜராத் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்தனர். 31,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழையால் ஏற்பட்ட சேதம் காரணமாக கட்ச், நவ்சாரி மற்றும் தாங் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 

51 மாநில நெடுஞ்சாலைகளும், 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து சாலைகளும் சேதமடைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

கடந்த 24 மாணி நேரத்தில் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மழையினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்ட பணத்திற்காகவும், இதர நிவாரணங்களுக்காகவும் மக்கள் மீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்க, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு நிர்வாகத்திற்கு முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். 

சௌராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு குஜராத்தில் உள்ள கட்ச், பருச், டாங், நவ்சாரி மற்றும் தபி மாவட்டங்களின் பல பகுதிகளில் புதன்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்தது.

கட்ச் மாவட்டத்தின் அஞ்சார், கட்ச் மற்றும் காந்திதாம் தாலுகாக்களில் 212, 197 மற்றும் 171 மிமீ மழையும், தாங்கில் உள்ள வாகையில் 174 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் 25 தாலுகாக்களில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழையைப் பெற்றுள்ளன என்று எஸ்இஓசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com