ஜென்மாஷ்டமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

பிவாண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழைகள் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க இஸ்கான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 
ஜென்மாஷ்டமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயில், வரவிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது. 

இந்தாண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி அனுசரிக்கப்படுகிறது.  ஆகஸ்ட் 14-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரக் காலத்திற்கு பிவாண்டி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழைகள் 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க இஸ்கான் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து கோயிலில் வசிக்கும் துறவி ஸ்ரீ சுதாமா தாஸ் கூறுகையில், 

இஸ்கான் நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதர், நமது கோயிலைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவில் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்று விரும்பியவர். 

இந்தாண்டு ஜென்மாஷ்டமி அன்று மாபெரும் அன்னதானத்திற்கு 5000 ஆயிரம் கிலோவுக்கு மேல் தானியங்கள், 2000 கிலோ காய்கறிகள், 1000 கிலோ சர்க்கரை, 500 லிட்டர் நெய், 3000 கிலோ பழங்கள் பயன்படுத்தப்படும். 

பிவாண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதிகளில் 1 லட்சம் சத்தான உணவுகள் சமைக்கப்படும். இஸ்கான் பிவாண்டியின் அன்னதானம் விநியோக செயல்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மார்ச் 2020 முதல், இஸ்கான் பிவாண்டி இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான இலவச உணவுகளை ஏழை மக்களுக்கு விநியோகித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com