புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை திறந்துவைத்தார் பிரதமர்: பிரமிப்பூட்டும் படங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலை திறப்பு
புந்தேல்கண்ட் நான்குவழிச் சாலை திறப்பு


உத்தரப்பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் நான்குவழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உத்தப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்ட் விரைவு சாலையை ஜலானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்து மக்களிடையே உரையாற்றினார்.

புந்தேல்கண்ட்டில் இன்று திறந்துவைக்கப்பட்ட நான்குவழிச் சாலை, ரூ.14,850 கோடி மதிப்பில் உத்தரப்பிரதேசத்தின் 7 மாவட்டங்கள் வழியாக 296 கிலோ மீட்டர் தொலைவுக்குக் கட்டப்பட்டுள்ளது.

இந்த நான்குவழிச் சாலைக்கு கடந்த 2020ஆம் ஆண்டு  பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. 28 மாதங்களில் இந்தச் சாலை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா -  லெக்னௌ விரைவுச் சாலையுடன் இணையும் வகையில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இது உத்தரப்பிரதேசத்தின் சித்ரகூட்,  பந்தா, மகோபா, ஹமிர்பூர், ஜலான் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும். எதிர்காலத்தில் 6 வழிச் சாலையாக மாற்றும் வகையில்  இந்தச் சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com